சிறுகதை: ~~ தியேட்டர் ~~ -விஜயநிலா

எழுதிக் கொண்டிருந்ததை பாதியில் நிறுத்தி விட்டு சன்னல் வழியே பார்க்க ஆரம்பித்தாள் நித்யா. உயரமாக வளர்ந்திருந்த வேப்பமரத்தில் தன் கூட்டில் ஒரு காகம் அமர்ந்திருந்தது.அந்த இடம் ஒரு காலிமனை. அதையடுத்த இடத்தில்தான்  அந்த தியேட்டர் இருந்தது.அதை இப்போது முக்கால்வாசி இடித்துத் தள்ளி விட்டர்கள்.கிரேக்க நாடுகளில் எல்லாம் கிறிஸ்து பிறப்பதற்கு 700 வருடங்களுக்கு முன்னர்  டியோன்ஸியா விழாவில்தான் தியேட்டர் என்ற கான்சப்ட் வந்தது என்று கல்லுரரியில் எப்போதோ யாரோ ஒருவர் ஏதோ ஒரு விழாவில் சொன்னது நினைவிற்கு வந்தது அவளுக்கு.க்ரீக் டிராஜடி கூட இதற்கு அப்புறம்தான் வந்தது என்பதும் நினைவிற்கு வர..மறுபடியூம் அந்த தியேட்டர் இடிபாடுகளை பார்க்க ஆரம்பித்தாள்.பால்கனி நாற்காலிகள் மட்டும்  சோகமாக இடிபாடுகளுடன் தெரிந்தன.காகம் இப்போது லேசாக தொண்டையை செருமிக்கொண்டது.பேனாவை மூடி வைத்து விட்டு நித்யா எழுந்தாள்.

  அந்த தியேட்டரை இடித்தது ஒரு லேசான சோகத்தை மனதில்
செலுத்தியது.அது தன்னுடைய தியேட்டர் இல்லை.யாரோ தன்னுடைய இடத்தில் உள்ள தியேட்டரை இடிக்கிறார்கள். இடித்து விட்டு அதை ஷாப்பிங் காம்ப்ளக்ஸாகவோ இல்லை வேறு எதற்காகவோ பயன்படுத்திக் கொள்ளப் போகிறார்கள்.இதில் நமக்கு ஏன் வருத்தமாக இருக்கிறது.  ஒரு வேளை அந்த தியேட்டரில் படம் பார்த்த போது இருந்த ~நித்யா|வையூம் அப்போது இருந்த தினங்களும் இனி வரவே வராது என்பதற்காகத்தான் மனம் சோகமாகி
விடுகிறதோ என நினைத்தாள். அப்போது கணேசன் வந்தான்.

  அந்த அலுவலகத்தில் கணேசனுடன் பேசுவதற்கு அவளுக்குப் பிடிக்கும்.அவனிடம் எல்லா விஷயங்களும் பேசலாம்.
ட்மார்னிங்.என்னவெளிய வேடிக்கையா?வாங்க ஒரு டீ அடிச்சிட்டு வருவம்என்றான்.
வேணாம்பா.இன்னிக்கி டீ வேணாம்
ஏன்
தெரியலை.அந்த தியேட்டரை இடிச்சுத் தள்ளினது எனக்கு
என்னவோ போல இருக்கு
இதப் பார்றா.அது வெறும் கட்டிடம் என்ன பண்ணறது.இனி வெளிய போய் சினிமா பாh;க்கறதெல்லாம் நடக்காது.அதுக்கு ஏத்தமாதிரி பண்ண வேண்டியதுதான்
ன் கவலை அது இல்ல
பின்னே
"அந்த தியேட்டரில இருந்த செங்கல்லுக்கெல்லாம் வலிச்சிருக்குமோன்னு
நித்யா
என்ன கணேசன்
இது ரொம்ப ஆபத்தானது
உயிரற்ற பொருள்களுக்கு உணர்ச்சிகளை சிமுலேட் பண்ணறது கூட ஒருவகையான மனபாதிப்புதான்
சரி இருக்கட்டும்.உங்ககிட்ட ஒரு நல்ல சேதி சொல்லனும் கணேசன்
என்ன
போனமாசம் வந்த வரன் முடிஞ்சிருச்சி
கை கெரடுங்க.கொடுக்க மாட்டிங்க கல்யாணப்பொண்ணாச்சே.வாழ்த்துக்கள் நித்யா.ரொம்ப சந்தோஷமா இருக்குஎன்றான்.இதே கணேசன் ஒரு வருடம் முன்பு தன்னிடம் தனியாகப் பேச வேண்டும் என்றான்.அவன் அப்படிச் சொன்னபோது  அவன் கண்களில் காதலோ இல்லை வேறுவிதமான ஈர்ப்புத்தன்மையோ தென்படவில்லை.
அப்படியானால் இவன் இரக்கப்பட்டுதான் நம்மிடம் வந்து உன்னை கல்யாணம் பண்ணிக்                                   
கொள்ளப் போகிறேன் என்று சொல்லப் போகிறான் என்று நினைத்தாள்.
 காரணம் அவள் வயது.நித்யாவூக்கு அப்போது முப்பத்தேழு வயது.இளமை மெல்ல இன்னமும் நான் இருக்கிறேன் என்பது போல கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருந்தது.
சில புடவைகளில் அபாரமாக இருப்பாள்.சில புடவைகளில் வயது தெரிந்து விடும்.
காலையில் படு உற்சாகமாக இருக்கும்போது மீண்டும் ஒரு தரம் அவளைப் பார்க்கத்
தோன்றும்.சாயந்தரம் எண்ணெய் வடிந்த முகத்தை கழுவிக் கொண்டு வந்தாலும் கூட
ஒரு தளர்ச்சி இப்போதெல்லாம் ~முகத்தை|க் காட்டிக் கொடுத்து விடுகிறது.
 முப்பத்தைந்து வயது வரைக்கும் வீட்டில் யாரும் தலையெடுக்காததால் தன் ஒருத்தியின்
சம்பளம்  தேவைப்பட்டது.அப்பா ஒரு ஜவூளிக்கடையில் சேல்ஸ்மேனாக
இருக்கிறார்.மேனேஜர் வரைக்கும் எல்லா வேலையூம் அவர்தான் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வார்.முப்பது வருடங்களாக அந்த கடையில் இருக்கிறார்.காலையில் எழுந்து வேலைக்குச் சென்று விட்டால் இரவூ கடை அடைத்தபின் பதினோரு மணிக்குத்தான் வருவார்.ஆனால் சொற்ப சம்பளம்.இந்த வேலை நிறைவாக இருக்கிறது என்பார்.வீட்டை ஓட்டுவதற்கு இந்த வருமானம் போதவில்லை.
நித்யாவை படிக்க வைத்து விட்டார்.அடுத்த இருந்த ரகுவையூம்,கமலாவையூம் நித்யா படிக்க வைத்தாள்.கமலா இப்போது இன்ஜனியரிங் படித்து விட்டு கல்லுரியில் வேலை பார்க்கிறாள்.ரகு பிஎஸ்ஸி படிக்கிறான்.
 இதற்கிடையே நித்யாவை பெண் பார்க்க வந்த இடங்கள் எல்லாம் எதற்காக தட்டிக் கொண்டே சென்றன என்று புரியவில்லை.இருபது பவூன் வரைக்கும் அம்மா நகை வைத்திருந்தாள்.வங்கியில் அப்பா முப்பதாயிரம் வரைக்கும் கல்யாண செலவூக்கென்று வைத்திருந்தார்.அந்த முப்பதாயிரம் அவரைப் பொறுத்தவரையில்
மூன்று லட்ச ரூபாய்களுக்கு சமம்.சொந்தத்தில் யாரும் அவளை கல்யாணம் செய்து கொள்ள தயாராக இல்லை.
 அப்பா வழக்கம் போல கடைக்கு சென்று கொண்டிருந்தார்.இத்தனை வயதுக்குஅப்புறம் வரன் அமைவது சிரமம் என்பதெல்லாம் அவரைப் பொறுத்தவரை புரியவில்லை.கடையில் யாராவது கல்யாணப் பொண்ணுக்கு ஜவூளி எடுக்க வந்தார்களானால் அன்று இரவூ சாப்பிடும் போது அந்த புடவையின் டிசைன்,வந்திருந்த ஆட்களின் பேச்சு வழக்கு எல்லாம் சொல்லிக்கொண்டே, நித்யா கல்யாணத்திற்கும் இதே போல புடவை எடுக்க வேண்டும் என்பார்.
அவார்கள் ஒரு லட்ச ரூபாய்க்கு முகூர்த்தப் புடவை எடுத்திருப்பார்கள்.அப்பாவிடம் மொத்தமே முப்பதாயிரம்  ரூபாய்தான் இருக்கிறது.அவரது கனவை கலைக்க விரும்பாமல் அவர் சொன்னதை எல்லாம் கேட்டுக் கொண்டு தலையசைப்பாள்.
 இப்போது வயது எகிறிக் குதித்து ஓடுகிறது.இனி எங்கே கல்யாணம் பேசாமல் ஆர்யா இல்லையென்றால் ஷாகித்கபூர் இப்படி யாரையாவது மானசீகமாக பண்ணிக் கொண்டால்தான் உண்டு என்ற நினைப்புடன் இருந்தபோதுதான் கணேசன் தன்னுடைய விருப்பத்தை தெரிவித்தான்.
கணேசன்.உங்களை விட எனக்கு ஆறு வயசு அதிகம்
அதனால என்ன
நான் வேற சாதி
எங்கப்பாகிட்ட பைசா கிடையாது.நான் பாக்கறது தனியார் உத்யோகம்
நான் வெறும் எம்ஏ படிப்புதான்
பரவாயில்லை
என் முகத்தை சரியா பார்த்துட்டுச் சொல்லுங்க.என் காதோரத்துல ரெண்டு நரை முடி இருக்கு பாருங்க.என் கண்களுக்கு கீழே கருவளையங்கள்  இருக்கு பார்த்திங்களா..
எதைப் பத்தியூம் நான் கவலைப்படலை.
நானே ஒரு பொண்ணை உங்களுக்குப் பார்க்கறேனே கணேசன்
எப்படியூம் ஒரு பொண்ணைத்தானே பாக்கப்போறிங்க.நீங்க அந்தப்பொண்ணா இருக்கக் கூடாது
நான் பிராக்டிக்கலா ஒண்ணு சொல்லவா கணேசன்
என்ன
ஒவ்வொரு பொருளுக்கும் இந்த உலகத்தில மார்க்கெட் விலைன்னுஇருக்கு.உங்களோட தகுதிக்கு நான் சரியான சாய்ஸ் இல்ல
சே.இது பிராக்டிகல் இல்லை.நான் உங்களை விரும்பறேன் நித்யா
பதில் சொல்லாமல் சிரித்தாள்.
என்ன சிரிப்பு இப்ப
இது காதல் இல்லை கணேசன்.காதலா இருந்திருந்தா நாம முதமுத பாத்துகிட்டப்பவே ஒருத்தருக்கொருத்தர் ஒரு ஈர்ப்பு இருந்திருக்கும்.
அடிக்கடி பாத்து,பேசிப்பழகி அப்புறமா கனவில மிதந்து ஒருத்தர்
மனசை ஒருத்தர் திறந்து காட்டிட்டு வர்றதுதான் காதல்.அப்ப இதுக்கு
பேர் என்ன
நான் விரும்பலை.என்னை விட்ருங்க
"சின்சியரா ப்ரபோஸ் பண்றதுக்கு மரியாதையே இல்லையா நித்யா.டிரமாடிக்காதான் காதலை வெளிப்படுத்தனுமா"என்றான்
"உண்மையை சொல்லனும்னா ஐம் அன்ஃபிட் ஃபார் செக்ஸ் கணேசன்.உடல்ல எந்த கோளாறும் இல்லை.பழைய பாலச்சந்தர் படத்துல பிரமிளா சொல்ற மாதிரி ஆம்பளைங்கறது மறத்துடுச்சி.பிரமிளாவூக்கு தினந்தினம் ஆண்கள் தொட்டுத் தொட்டு மறத்துடுச்சி.எனக்கு தொடறதுக்கு ஆண்கள் இல்லையேன்னு மறத்துடுச்சி.இன்ஃபாக்ட் பஸ்ல யாராவது என்னை பின்பக்கமா உரசினா கூட மத்தவங்க சொல்லிதான் அது தெரியூது.நான் சுரணை இல்லாம அப்படியே நின்னுட்டு வர்றேன்.யாராவது என்னை நடுவழியில ரேப் பண்ணா கூட பேன்னு பார்த்துட்டுதான் நிப்பேன் போல.எல்லாருக்கும் மனசு கல்லாகும்.எனக்கு உடம்பே கல்லாயிடுச்சி கணேசன்.என்னை விட்ருங்க.உங்களுக்கு நல்ல பொண்ணுங்க கிடைப்பாங்க.."
போய் விட்டான்.அதன்பின் இரண்டொரு தடவை அவன் வந்து தன்னுடைய விருப்பம் அப்படியே இருப்பதாக தெரிவித்தும் நித்யா அவனது பேச்சு அந்த திசை நோக்கி செல்லாமல் பார்த்துக் கொண்டாள்.அதன்பின் அவனை ஒரு எல்லையிலேயே நிறுத்திக் கொண்டதாக மனதிற்குள் சொல்லிக்கொள்வாள்.
இப்படியே ஒரு வருடம் ஓடி விட்டது.அவ்வப்போது வரன்கள் வந்து பார்த்து விட்டுச் செல்வதை அவள் சொல்லச் சொல்ல அக்கறையாகக் கேட்டுக்கொள்வான்.எப்போதாவது பைலிலிருந்து நிமிர்ந்து பார்த்தால் அவன் தன்னை பார்த்துக் கொண்டிருப்பதை அவள் பார்த்து விட்டால் சட்டென்று தலையை குனிந்து கொள்வான்.பிறகு இயல்பாக அவளது டேபிளுக்கு வருவது போல வந்து ஏதாவது பேசிக் கொண்டிருக்கும்போது பேச்சின் ஊடே மெல்ல தான் அப்படி பார்த்தது தவறுதான் என்பான்.நித்யா பதில் சொல்லாமல் புன்னகைப்பாள்..
 கணேசன் இப்போது தவிப்பாக நின்றிருந்தான்.டோக்கன் வாங்கி இரண்டு கோப்பைகளில் டீ வாங்கிக் கொண்டு அவளிடம் கொடுத்து விட்டு அவளது பதிலுக்காகக்க காத்திருந்தான்.
என்ன சொன்னாங்க.அந்த கும்பகோணத்துக்காரங்கதானே
ஆமாம்.வர்ற சன்டே இன்னொரு இடத்தைக் கூட அப்பா கடையில வேலை பார்க்கற சாரதி அங்க்கிள் வரச்சொல்லியிருந்தாரு.அதுக்குள்ள இப்படியொரு சேதி கேட்டதும் அப்பாவூக்கு சந்தோஷம் தாங்கலை.பதினைஞ்சாயிரம் ரூபா செலவூல கல்யாணப்புடவை எடுக்கனும் என்று யாரிடமாவது பேசிக் கொண்டிருப்பாரு,”என்றாள்.
எனக்கே ரொம்ப சந்தோஷமா இருக்கு நித்யா
கணேசன்.உண்மையை சொல்லுங்க.நீங்க என்னை கல்யாணம் செஞ்சுக்கறதா சொன்னது ஒருவித பரிதாபத்துலதானே
இல்லை.உண்மையிலேயே உங்களை எனக்குப் பிடிச்சிருந்தது.இது ஒருவகை ஈடிபஸ் காம்ப்ளக்ஸா இல்லை ஈடுபாடான்னு தெரியலை.உங்களுடைய முகத்தைப்பார்த்தா ஸ்ரீவித்யா போல ஒரு சாயல் தெரியூது.நான் ஸ்ரீவித்யா படங்களை எல்லாம் ப்ளாக்அன்ட்வொயிட் காலத்துல விரும்பிப் பார்ப்பேன்
அப்படியா தெரியறேன்.என் முகம் லட்சுமிகரமா தெரியறதாம்.கும்பகோணத்து ஆளுங்க சொல்லிட்டுப் போயிருக்காங்க.காலைல எழுந்ததும் கண்ணாடி முன்னடி நிக்கறபோதுதான் என்னோட நிசமுகம் எனக்கே சிரிப்பா இருக்கும். பவூடரும்,ஷாம்ப்பூவூம் இல்லைன்னா என்னைப் போன்ற பெண்கள் பாடு பரிதாபம்தான்.
நீங்க ரொம்ப இன்ஃபீரியரா ஃபீல் பண்ணறிங்க.சிய ர்அப்,”என்றான்.
 அலுவலத்தில் மறுபடியூம் தன்னுடைய சீட்டிற்கு வந்தம ர்ந்தாள்.தியேட்டரை இன்னும் இடித்துக் கொண்டிருந்தா ர்கள்.வேப்பமரத்தில் இப்போது காகம் இல்லை.முன்பெல்லாம் மரக்கிளைகளில் அணில்கள் கீச்கீச்சென்று கத்திக் கொண்டிருக்கும்.இப்போது அணில்கள் வருவதே இல்லை.தியேட்டரை இடித்துக்கொண்டிருந்த ஆட்களில் ஒரு பிரிவினார்கீழே டீக்கடையில் நின்று கொண்டு வடை சாப்பிட்டுக் கொண்டே சுவற்றிலிருந்த போஸ்டர்களைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.இவர்களும் இதே தியேட்டரில் படம் பா ர்த்திருப்பார்கள்.
படம் பார்த்திருக்கும்போது இந்த தியேட்டரை ஒரு நாள் நாம் இடிக்கப்போகிறௌம் என்று நினைத்திருப்பார்களா? நாம் கூட ஒரு தரம் இந்த தியேட்ட ரில் அப்பாவூடன் பாலசந்தர் படத்திற்கு வந்திருக்கிறௌம்.சீட்டில் இடம் கிடைக்கமல் மடக்குநாற்காலியில்
அமர்ந்து படம் பார்த்தோம்.
 தன்னை யாரோ உற்றுப் பார்ப்பது போல தெரிய தலையை உயர்த்திப் பார்த்தாள்.கணேசன்தான்.கம்ப்யூட்டரில் வர்ட் ப்ராசசரில் எதையோ பா ர்த்துக் கொண்டிருந்த ஆர்த்தியின் அருகில் நின்று கொண்டு அவளிடம் பேசிக் கொண்டே தன்னையே தன் முகத்தையே கவனித்துக் கொண்டிருந்தான்.
ஸ்ரீவித்யா போலவா நான் இருக்கிறேன்.அதனால்தான் வயது அதிகம் என்றாலும் என்னை கல்யாணம் பண்ணிக் கொள்கிறேன் என்று சொன்னானா கணேசன். அவன் அம்மாவிடம் கிடைத்து வந்த அன்பை அருகாமையை என் மூலமாக புதுப்பித்துக் கொள்ளப் பார்க்கிறானா?அவள் பார்த்து விட்டதை உணர்ந்ததும் அருகே வந்தான்.மெல்லச் சிரித்தாள்.
என்ன கணேசன்.ஆர்த்திகிட்ட பேசிட்டு இருந்திங்க போலருக்கு
சாரி.நான் பேசிட்டு இருந்தாலும் உங்களைத்தான் பாத்திட்டு இருந்தேன்
ஏன்
இனிமே உங்களைப் பார்க்க முடியாதே
ஏன்
கல்யாணமாகி கும்பகோணத்துக்குப் போயிட்டிங்கன்னா நான் எங்கே உங்களை பாக்கப்போறேன்.மகாமகத்து அன்னிக்கி நீங்க ஒரு பையனையோ இல்லை பொண்ணையோ பிடிச்சிட்டு.இன்னும் கொஞ்சம் குண்டா,முகமெல்லாம் சந்தோஷத்துல புஸ்ஸூன்னு ஆகி,குளக்கரையில நின்னுட்டு இருக்கறதை அதி ர்ஷ்டம் இருந்தா
நான் நேர்லயோ டிவியிலயோ பார்க்கலாம்.அதான் பார்த்திட்டு இருந்தேன் நித்யா
அய்யோப்பா.எதுக்கு இத்தனை நீளமான கற்பனை.அவரோட பேரு ராமச்சந்திரன்ங்கறதை தாண்டி நான் எதையூமே கற்பனை பண்ணிக்கலை.நடக்கற எல்லாமே ஏதோ ஒரு சினிமால நான் இருக்கறது போல இருக்கு.சரிஇன்னிக்கி ஈவ்னிங் சின்னதா ஒரு ட்ரிட்
கொடுத்திர்றேன்.மிடில்க்ளாஸ் ட்ரிட்.ஒரு ஸ்வீட்,காரம் அப்புறம் இருபது ரூபாய்க்குள்ள ஏதாவது ஒரு ஐஸ்க்ரீம்
நான் இப்பவே பர்மிஷன் போட்டுட்டு ரெடியா இருக்கேன்என்று அவன் போனதும்தான்
சட்டென்று அடிவயிற்றில் ஊசி குத்தின மாதிரி இருந்தது.நாற்காலியில் சற்று வசதியாக சாய்ந்து கொண்டதும் வலி இன்னும் அதிகமானது.முதுகில் ஏதோ ஊர்வது போல இருந்தது.வியர்த்துக் கொட்டி விடுமோ என்று பயம் வந்தது.யூரின் போக வேண்டும் போலிருந்தது.
 எழுந்தாள்.டாய்லெட்டிற்குள் சென்றதும் வலி இன்னும் அதிகமானது.எதுவூம் வரவில்லை.பற்களைக் கடித்துக் கொண்டாள்.சட்டென்று வலி நின்று போனது.இந்த இடத்திலா
வலித்தது என்பது போலிருந்தது.வலி வந்தது போல கனவூ ஏதும் கண்டிருக்கிறௌமா என்று தோன்றியது.வாஷ்பேசினில் தண்ணீரை அள்ளி முகத்தில் அடித்துக் கொண்டு வந்தாள்.இருக்கையில் வந்து அமர்ந்ததும் சற்று ஆயாசமாக இருந்தது.கண்கள் இயல்பாக கணேசனைத் தேடியது.அவன் இல்லை என்பது உறைக்க சட்டென்று வலி மறுபடியூம் இப்போது சற்று பிடிவாதமாகப் புறப்பட்டது.ஆயிரம் ஊசிகளை செருகின மாதிரி வலித்தது.வலியில் கத்தி விடக் கூடாதே என்று பற்களைக் கடித்துக் கொண்டாள்.பத்து நிமிடங்களுக்கு அந்த வலி இருந்தது.
 கணேசன் வந்ததும் சொன்னாள்.அதைக் கேட்டதும் சிறிய திடுக்கிடலுடன் பார்த்தான்.சொன்னான்.
பர்மிஷன் போட்டுட்டு வந்திருங்க.முதல்ல ஒரு டாக்டரைப் பா ர்த்திரலாம்
ஒண்ணுமில்லை கணேசன்.வாங்க.பர்மிஷன் போட்டுட்டே போவம்.டாக்டர் எல்லாம் வேணாம்.ஒரு ப்ரூஃபன் சாப்பிட்டுட்டா சரியாப் போகிடும்.வலி தெரியாது.
வீட்டுல ஏதாவது டாப்லட் இருக்கும்
இல்லை நித்யா.இது வேற வலின்னு நினைக்கறேன்.சம்திங் சீ ரீயஸ்
என்ன சொல்றிங்க கணேசன்
அடிவயித்துல வலி வலது பக்கத்துலயா இடது பக்கத்துலயா?வலது பக்கத்துலவலின்னா ஒரு வேளை அப்பன்டிசைடிசா இருக்கலாம்.உடனே ஆபரேஷன் பண்ண வேண்டி வந்தாலும் வரலாம்.உங்கப்பாவூக்கு போன் பண்ணிடலாமா
வேண்டாம்.அவரோட கல்யாணக் கனவை கலைக்க வேணாம்.உங்க திருப்திக்கு வேணும்னா ஒரு டாக்டரைப் பாh;த்திட்டுப் போகலாம்.இப்ப நான் நார்மலாதான் இருக்கேன்
 வெளியே வந்தார்கள்.தியேட்டரை இன்னமும் இடித்துக் கொண்டிருந்தார்கள்.நாற்காலிகளை உடைத்து அடுக்கிக் கொண்டிருந்தார்கள்.சினிமா போஸ்டர்களுக்கு இணையாக ஜவூளிக்கடைகளின் போஸ்டர்கள் சுவர்களை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன.அந்த சாலையின் முனையில் ஒரு கிளினிக் இருந்தது.உள்ளே போய் அவசரம் என்று சொன்னதும் டோக்கன் கொடுத்து காக்க வைத்தார்கள்.
கணேசன் பொறுமையாக அமர்ந்திருந்தான்.இவனை நான் மிஸ் பண்ணுகிறேனா?இவனையேபண்ணிக் கொண்டிருந்திருக்கலாமா?எனக்கு உடம்புக்கு ஏதாவது என்றால் கும்பகோணத்து ராமச்சந்திரன் இது போல வருவானா என்று நினைத்தாள். அடுத்தது அவள் முறை என்றார்கள்.அப்போதுதான் வயிற்றில் ஐஸ் கத்தியை செருகின மாதிரி அதிர்ந்தாள்.
 மைகாட்.எப்படி மறந்து போனேன்.சே.இதை ஏன் இத்தனை நாளும் நினைக்கவே இல்லை.கல்யாணப்பேச்சிலேயே மறந்து விட்டேன் போலிருக்கிறது.இந்நேரம் வந்திருக்க வேண்டுமே.ஒரு மாதத்திற்கும் மேலாக தப்பிப் போயிருக்கிறதே.எப்படி
கவனிக்கத் தவறினேன்.அப்படியென்றால் இது அப்பன்டிசைடிஸ் வலி இல்லை.வேறு ஏதோ ஆதாரமாகச் சரியில்லை.
 அவளை அழைத்தார்கள்.உள்ளே இருந்த டாக்டர் சரிவர தலை வாராமல் கறுப்பாக  இருந்தாள்.சிரித்தாள்.பற்களில் மஞ்சள் கறை இருந்தது.மேலுதட்டின் மேல் உருண்டையாக ஒரு மச்சம் இருந்தது.
உட்காரும்மா.எப்பலர்ந்து வலி இருக்கு.பீரியட்ஸ் எல்லாம் ஒழுங்கா வருதா
 அந்த கேள்விதான் செரேல் என்றது.வியர்த்து விட்டது நித்யாவிற்கு.பதில் சொன்னாள்.டாக்டர் சந்தேகமாக நெற்றியை விரலால் தடவிக் கொண்டார்.சோதித்துப்பார்த்தாள்.வயது என்ன ஆகிறது என்று கேட்டாள்.
 சொன்னாள்.
வெளிய இருக்கறது உன்னோட ஹஸ்பன்ட்டா? அவரை வரச்சொல்லும்மா.கொஞ்சம் துப்புறவா பேசிரலாம்.இது அநேகமாக அதுதான்.இப்ப சில பேருக்கு முன்னாடியே வந்துர்றது.ப்ரீமெச்சூ ர்டு மெனோபாஸ்.உனக்கு அதிர்ச்சியாதான் இருக்கும்.இதை
நீ ஏத்துக்கத்தான் வேணும்.எங்கே அவரு
 மறுநாள் அலுவலகத்தில் வந்ததும் தியேட்டரை எட்டிப் பா ர்த்தாள்.சுத்தமாக உடைத்து எறிந்திருந்தார்கள்.தியேட்டர் இருந்த இடம் பளபளவென்று பளிங்கு போல சுத்தமாக இருந்தது.வேறு யாரோ ஆட்கள் அந்த இடத்தை டேப் வைத்து அளந்து கொண்டிருக்க நித்யாவின் கண்களிலிருந்து  கண்ணீர் வர மறுத்தது,கண்கள் ஏற்கனவே காய்ந்து போயிருந்ததால்.

                                              ------------------------
Previous
Next Post »